search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இல. கணேசன்"

    ராகுல் காந்தி வருகையால் தமிழகத்தில் பெரிய மாற்றம் உருவாகாது என்று பாஜக மூத்த தலைவர் இல.கணேசன் கூறியுள்ளார். #ilaganesan #rahulgandhi #parliamentelection

    வாலாஜா:

    வாலாஜா ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்கிய பீடத்தின் 15ம் ஆண்டு ஸம்வத்சராபிஷேக விழா, 16 தெய்வங்களுக்கு திருக்கல்யாண மஹோத்சவ விழா மற்றும் முரளிதர ஸ்வாமிகள் 58வது ஜெயந்தி விழா முன்னிட்டு நேற்று 108சுமங்கலி பூஜை, கோ மாதா திருக்கல்யாணம், சமஷ்டி உபநயனம் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் முரளிதர ஸ்வாமிகள் ஆசிகளுடன் காலை கணபதி ஹோமம், கோ பூஜை செய்து 108சுமங்கலிக்கு பூஜையும் கோமாதா திருகல்யாணம் நடைபெற்றது.

    இதில் பா.ஜ.க மூத்த தலைவர் இல.கணேசன், ரத்தனகிரி பாலமுருகனடிமை ஸ்வாமிகள், ஏர்வாடி ராதாகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டு பக்தர்களுக்கு ஆசிர்வதித்து சிறப்பித்தனர்.இதனைதொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதனைதொடர்ந்து பாஜக மூத்த தலைவர் இல.கணேசன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழகத்தில் ராகுல் வருகையால் எந்த ஒரு பெரிய மாற்றம் உருவாகாது. ராகுல் எங்கெல்லாம் பேசுகிறாரோ அங்கெல்லாம் மக்கள் நரேந்திர மோடிக்கு ஆதரவான மனநிலைக்கு மாறுகிறார்கள். மக்களிடத்தில் அபத்தமான கருத்துகளை முன்வைப்பார்கள். இவர்களுடைய சரக்கு இவ்வளவுதான் என மக்கள் நினைப்பார்கள்.

    வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளும் வெற்றி பெற வாய்ப்பு இருக்கிறது. கடந்த முறை பா.ம.க. ஒன்று, பா.ஜ.க. ஒன்று, மற்ற அனைத்தும் அதிமுக கைப்பற்றியது. அப்போது யாருயெல்லாம் வெற்றி பெற்றார்களோ அவர்கள் எல்லாம் ஒன்று சேர்ந்திருக்கிறோம் கூட்டணி வைத்திருக்கிறோம் மீண்டும் வெற்றி பெறுவோம்.

    இவ்வாறு அவர் கூறினார். #ilaganesan #rahulgandhi #parliamentelection

    புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இன்று அதிகாலை இந்திய விமானப்படை விமானங்கள் பாகிஸ்தானுக்குள் புகுந்து தாக்குதல் நடத்தியதற்கு ராகுல் காந்தி சல்யூட் தெரிவித்துள்ளார். #PulwamaAttack #IAFAttack #LoC
    புதுடெல்லி:

    புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இன்று அதிகாலை இந்திய விமானப்படை விமானங்கள் பாகிஸ்தானுக்குள் புகுந்து தாக்குதல் நடத்தி பயங்கரவாதிகளின் முகாம்களை அழித்தன.

    இந்தியாவின் பதிலடி தாக்குதலுக்கு தலைவர்கள் வரவேற்பும், பாராட்டும் தெரிவித்துள்ளனர். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது டுவிட்டரில் ‘இந்திய விமானப்படை விமானிகளுக்கு சல்யூட்’ என்று குறிப்பிட்டுள்ளார். இந்திய தேசிய கொடி லோகோவையும் பதிவிட்டுள்ளார்.

    காங்கிரஸ் கட்சி சார்பிலும் இந்திய விமான படைக்கு பாராட்டு தெரிவித்து டுவிட்டரில் வாழ்த்து வெளியிடப்பட்டுள்ளது.

    அதில், ‘‘இந்தியர்களை பாதுகாக்க இந்திய விமான படை மேற்கொண்ட உறுதியான தீர்க்கமான நடவடிக்கைகளுக்கு நாங்கள் வணக்கங்களை தெரிவித்து கொள்கிறோம் ஜெய்ஹிந்த்’’ என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.



    டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் தனது டுவிட்டரில் இந்திய வீரர்கள் பதில் தாக்குதல் நடத்தி பெருமைப்படுத்தி உள்ளனர் என்று குறிப்பிட்டு உள்ளார்.

    பா.ஜனதா மூத்த தலைவர் சுப்பிரமணியசாமி கூறுகையில், ‘‘சகோதி, முசாபராபாத், பாலாகோட் ஆகிய இடங்களில் பயங்கரவாதிகளின் முகாம்கள் அழிக்கப்பட்டன. உண்மையில் இந்தப் பகுதிகள் நமக்கு சொந்தமானவை. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் என்று அழைக்கப்படுகிறது. எனவே நாம் நமது மண்ணில்தான் குண்டுவீசி இருக்கிறோம். இதில் தவறு இல்லை. நம் பகுதியை காக்க நாம் தாக்குதல் நடத்தி இருக்கிறோம்.

    இதுவே அவர்களது (பாகிஸ்தான்) எல்லை என்றால் ஐ.நா. படை மூலம் தான் தாக்குதல் நடத்தி இருக்க முடியும். எங்களை தாக்கினால் நாங்கள் இந்தியாவை ஆயிரம் கூறு போடுவோம் என்று பாகிஸ்தான் மிரட்டி இருந்தது. எனவே 1000 குண்டுகளை இந்தியா வீசியிருப்பது சரியானது என்று குறிப்பிட்டுள்ளார்.

    பா.ஜனதா எம்.பி. இல.கணேசன் கூறுகையில், “40 வீரர்கள் பலியானபோது வேதனை அடைந்தோம். இப்போது பதிலடி கொடுப்பது ஆறுதல் அளிக்கிறது” என்றார். #PulwamaAttack #IAFAttack #LoC
    2019-க்குள் தமிழகத்தில் மிகப்பெரிய மாற்றம் ஏற்படும் என இல. கணேசன் கூறினார். #ilaGanesan #petroldiesel

    ராஜபாளையம்:

    ராஜபாளையத்தில் நடைபெற்ற மத்திய அரசின் சாதனை விளக்க கூட்டத்தில் இல.கணேசன் எம்.பி. பேசியதாவது:-

    பிரதமர் நரேந்திர மோடி அரசு. முத்ரா வங்கி திட்டம் மூலம் 10 கோடி பெண்கள் பயனடைந்துள்ளனர்.

    பா.ஜ.க. கட்சி எந்த மதத்திற்கும் ஆதரவானவர்களும் அல்ல எதிரானவர்களும் அல்ல.

    பா.ஜ.கவிற்கு நம்பிக்கை உள்ளவர்களாக இருந்தால் அப்துல் கலாமையே குடியரசு தலைவராக வைத்து அழகு பார்த்தோம். அதே சமயம் துரோகம் செய்தால் கூண்டோடு அழிப்போம்.


    2019-க்குள் தமிழகத்தில் மிகப்பெரிய மாற்றங்கள் ஏற்படும். பெட்ரோல், டீசல் உயர்வுக்கு மத்திய அரசு காரணம் அல்ல.

    இவ்வாறு அவர் பேசினார். #ilaGanesan #petroldiesel

    ஆர்.கே.நகரைப் போன்று திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் ஹவாலா வேலை ஈடுபடாது என்று இல.கணேசன் எம்.பி. தெரிவித்துள்ளார். #BJP #LaGanesan
    அலங்காநல்லூர்:

    பாலமேட்டில் பா.ஜனதா கட்சியின் ஆலோசனை கூட்டம் நடந்தது.

    சோழவந்தான் தொகுதி அமைப்பாளார் கோவிந்த மூர்த்தி தலைமை தாங்கினார். பொறுப்பாளர் சந்திரபோஸ் , நகர் தலைவர் குமரேசன் முன்னிலை வகித்தனர்.

    மாநில செயாலளர் சீனிவாசன்,மாவட்ட தலைவர் சுசீந்திரன், தேனி பாராளுமன்ற பொறுப்பாளர்கள் ராஜபாண்டியன், கர்னல்பாண்டியன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    வரவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெறுவதற்கான வழி முறைகள் குறித்து நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டது.

    இதில் கலந்து கொண்ட இல. கணேசன் எம்.பி நிருபர்களிடம் கூறியதாவது:-

    தற்போது தமிழ்நாட்டில் நிலவிவரும் விலைவாசி உயர்வுக்கு பெட்ரோல்,டீசல் விலை மட்டுமே காரணம் இல்லை. மாநில அரசுகள் ஜி.எஸ்.டி. வரி வரம்பிற்குள் எரிபொருள் விற்பனையை கொண்டு வந்தால் 25 சதவீதம் வரை விலை குறைய வாய்ப்புள்ளது.

    வரவுள்ள திருப்பரங்குன்றம் சட்டமன்றம் இடைத்தேர்தலில் ஆர்.கே. நகரில் ஒரு கட்சி வெற்றி பெற்றது. அதைபோல் இங்கும் அவர்களது ஹவாலா வேலை எடுபடாது.

    பாரதிய ஜனதாவின் கூட்டணி வரும் பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெறும். பா.ஜ.க. சாதாரண மக்களுக்கும், விவசாயிகளுக்கும் பல்வேறு வகையில் நலதிட்ட உதவிகளையும் வழங்கி வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார். #BJP #LaGanesan
    வருமான வரித்துறை சோதனையில் தவறு செய்தவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என்று சேலத்தில் இல. கணேசன் எம்.பி. நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். #ilaganesan #incometaxraid

    சேலம்:

    சேலம் மரவனேரியில் ஆடிட்டர் ரமேஷ் கொலை செய்யப்பட்ட இடத்தில் 5-ம் ஆண்டு நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் இல.கணேசன் எம்.பி கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    ஆடிட்டர் ரமேஷ் அவருக்காக வாழாமல் ஏழை, எளிய மக்களுக்காக வாழ்ந்தார். இவர் பண்பு, பணிவு குணத்தோடு வாழ்ந்தவர். இறந்த போது ஆஸ்பத்திரியில் இருந்து அவர் உடலை எடுத்து செல்லும் போது பொதுமக்கள் கதறி அழுதனர், அதை நான் நேரில் பார்த்தேன். அவர் உண்மையான தொண்டனாக இருந்தார். அவருடன் இருந்த நிர்வாகிகளுக்கு அவர் விட்டுச்சென்ற பணிகளை முழுமையாக செய்ய வேண்டும் என்று வேண்டுகோளாக வைக்கிறேன். 5 ஆண்டுகள் நிறைவு பெற்றாலும் வேதனை அளிக்கிறது என்னவென்றால் கொலையாளிகளை தேடும் முயற்சி, தண்டனை வழங்கும் முயற்சியும் முழுமை பெறவில்லை.

    இது போன்ற நிகழ்வுகளில் மாநில அரசு முக்கியத்துவம் கொடுத்து, விசாரணையை தீவிரப்படுத்த வேண்டும். வருமான வரி ரெய்டு என்பது பாராட்டுக்குரியது. யார் தவறு செய்தாலும் பாரபட்சம் பார்க்காமல் தண்டிக்கப்பட வேண்டும். ரெய்டு மூலம் வருமான வரித்துறையினர் தவறு உண்மை என்றால் அவர்கள் மீது நீதி மன்றம் மூலம் வழக்கு தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்படுவார்கள்.

    சிறுமி மீது நடந்த பாலியல் சம்பவம் வேதனை அளிக்கிறது. பாலியல் குற்றங்கள் குறைய கடுமையான சட்டம் ஏற்ற வேண்டும். 12 வயதுக்கு உட்பட்ட சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தால் மரண தண்டனை விதிக்க மத்திய அரசு இந்த கூட்டத்தொடரில் கொண்டு வர பரிசீலித்து வருகிறது. 

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்நிகழ்ச்சியில் மாவட்ட தலைவர் கோபிநாத், முன்னாள் எம்.எல்.ஏ லட்சுமணன், முருகேசன், அண்ணாதுரை, எஸ்.சி. எஸ்.டி பிரிவு செல்வம், சரவணன் உட்பட பலர் கலந்து கொண்டனர். #ilaganesan #incometaxraid

    தூத்துக்குடியில் ஸ்டெர்லைட்டுக்கு எதிரான போராட்டத்தில் சமூக விரோதிகள் ஊடுருவியதால் அவர்கள் யார் என்பதை கண்டுபிடித்து நடவடிக்க எடுக்க வேண்டும் என இல.கணேசன் கூறினார். #ilaganesan #tuticorinfiring

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டம் ராஜாக்க மங்கலத்தில் பாரதீய ஜனதா கட்சியின் மாவட்ட செயற்குழுக்கூட்டம் நடைபெற்றது. இதில் மாநில செயற்குழு உறுப்பினர் இல.கணேசன் எம்.பி. கலந்து கொண்டார். அதன்பிறகு நிருபர்களுக்கு பேட்டி அளித்த அவர் கூறியதாவது:-

    தூத்துக்குடியில் ஸ்டெர்லைட்டுக்கு எதிரான போராட்டத்தில் சமூக விரோதிகள் ஊடுருவியதால் தான் அந்த போராட்டம் துப்பாக்கி சூட்டில் முடிவடைந்தது. அந்த போராட்டத்தில் கலந்துகொண்ட சமூகவிரோதிகள் யார்? என்பதையும், அவர்களை தூண்டிவிட்டவர்களையும் கண்டுபிடிக்க வேண்டும்.

    சமூகவிரோதிகளை தூண்டி விட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேசமயம் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் மீது அனுதாபம் காட்ட வேண்டும். மேலும் இந்த போராட்டத்துக்கு தொடர்பு இல்லாதவர்களும் இதில் பாதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு உரிய இழப்பீடும், மறுவாழ்வும் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    2019-ம் ஆண்டு நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் அனைத்து தொகுதியிலும் பாரதீய ஜனதா வெற்றி பெறுவதற்கான திட்டம் பற்றி தேசிய தலைவர் அமித்ஷா ஆலோசனைகள் வழங்கி உள்ளார். அவரது ஆலோசனைப்படி அதற்கான திட்டத்தை தமிழகத்தில் செயல்படுத்துவது பற்றி விவாதிக்கப்பட்டது.

    தற்போது அது தொடர்பாக தமிழகம் முழுவதும் உள்ள பாரதீய ஜனதா கட்சியின் 42 அமைப்பு மாவட்டங்களில் தற்போது மாவட்ட செயற்குழு கூட்டங்கள் நடத்தப்பட்டு தேர்தலை நோக்கிய பயணத்திட்டம் பற்றி விளக்கப்பட்டு வருகிறது.

    மத்திய அரசின் சாதனை திட்டங்களை தமிழக மக்களிடம் பாரதீய ஜனதா கொண்டு செல்லும். அதன் மூலம் பாராளுமன்ற தேர்தலில் வெற்றிக்கு வியூகம் வகுத்து செயல்படமுடியும். விலை மதிக்கமுடியாத ராஜராஜ சோழன் சிலை மீட்கப்பட்டது மகிழ்ச்சி அளிக்கிறது. இதற்கு காரணமான போலீஸ் அதிகாரிகளை பாராட்டுகிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார். #ilaganesan #tuticorinfiring

    கர்நாடகாவில் ஏற்பட்டுள்ள ஆட்சி நிலைக்காது எனவும் தானாகவே கவிழ்ந்து விடும் என்றும் பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் இல.கணேசன் எம்.பி. தெரிவித்துள்ளார். #Karnataka #BJP #LaGanesan
    பழனி:

    பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் இல.கணேசன் எம்.பி. பழனி வந்தார். அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    இலங்கையில் உள்ள தமிழ் மக்கள் பிரதமர் மோடியின் மீது நம்பிக்கை வைத்துள்ளனர். பாரதிய ஜனதாவின் 4 ஆண்டுகால ஆட்சியில் ஊழல் குற்றச்சாட்டுகள், பெரிய அளவிலான பயங்கரவாத மற்றும் தீவிரவாத தாக்குதல்கள் நடைபெறவில்லை.

    பாரதிய ஜனதா கட்சியின் 4 ஆண்டுகால சாதனைகளை விளக்க பிரதமர் தமிழக கிராமங்களை நோக்கி வர உள்ளார். நாடு முழுவதும் காங்கிரஸ் ஆட்சி சுருங்கி வருகிறது. கர்நாடகாவில் ஏற்பட்டுள்ள ஆட்சி நிலைக்காது. தானாகவே கவிழ்ந்து விடும்.

    ஸ்டெர்லைட் விவகாரத்தில் கசிவுகள் சரிசெய்யப்பட வேண்டும். அனைத்து விதமான முன்னோடி திட்டங்களையும் எதிர்த்து போராடி வரும் வைகோ போன்றோர் இத்திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிப்பதால் போராட்டம் நீர்த்துப்போக வாய்ப்புள்ளது. பெட்ரோல்- டீசலை ஜி.எஸ்.டி.க்குள் கொண்டு வந்தால் விலை பெருமளவு குறையும்.


    தனியார் பள்ளிகளைப் போல் அரசு பள்ளிகளின் தரத்தை உயர்த்த வேண்டும். அப்போது அரசு பள்ளிகளின் சேர்க்கை உயரும். தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சி பலமடைந்து வருகிறது.

    கோவில்களில் உள்ள சிலைகளை தமிழக அரசு ஆய்வு செய்ய வேண்டும். வருமானத்தை அதிகரிக்க கோவில் சொத்துக்களான கடைகள் போன்றவற்றிற்கு நியாயமான வாடகைகளை நிர்ணயித்து வசூலிக்க வேண்டும். வெளிநாடுகளில் உள்ள இந்திய சிலைகளை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார். #Karnataka #BJP #LaGanesan
    காவிரி பிரச்சினையில் தமிழகத்திற்கு நியாயம் கிடைக்கும் என்று பாரதீய ஜனதா மூத்த தலைவர் இல. கணேசன் கூறியுள்ளார். #cauveryissue

    கோவை:

    பாரதீய ஜனதா மூத்த தலைவர் இல. கணேசன் இன்று கோவையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது-

    கர்நாடக தேர்தலில் பாரதீய ஜனதா வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும். வாக்கு பதிவுக்கு பிந்தைய கருத்து கணிப்பு அதனை உறுதி செய்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது.

    கர்நாடகத்தில் பாரதீய ஜனதா ஆட்சி அமைந்தால் தான் தமிழகத்திற்கு நன்மை கிடைக்கும் என முதல்-அமைச்சர் கூறி இருக்கும் கருத்தை வழி மொழிகிறேன்.

    காவிரி பிரச்சினையில் தமிழகத்திற்கு நியாயம் கிடைக்கும். நாளை வரைவு செயல் திட்டம் தாக்கல் செய்யப்பட உள்ளது. இப்பிரச்சினையில் தமிழகத்திற்கு நியாயமான முறையில் தீர்வு கிடைக்கும்.

    எஸ்.வி. சேகரை பொறுத்தவரை அவர் பாரதீய ஜனதாவில் உறுப்பினராக இருந்தாலும் தீவிரமாக பணியாற்றியது இல்லை. அவர் தான் பதிவிட்ட கருத்துக்கு வருத்தம் தெரிவித்து உள்ளார்.

    வேறு ஒருவர் பதிவை படிக்காமல் பதிவு செய்து விட்டேன் என தெரிவித்து உள்ளார். அவருக்கு இந்த பதிவை அனுப்பியது யார்? என்பதை கண்டு பிடிக்காமல் உள்ளது சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    ஆடிட்டர் குருமூர்த்தி பாரதீய ஜனதா நலன் விரும்பி. ரஜினிக்கும் நல விரும்பியாக உள்ளார். பாரதீய ஜனதாவும் ரஜினியும் இணைந்து செயல்பட வேண்டும் என குருமூர்த்தி கூறிய கருத்து குறித்து இப்போது எதுவும் சொல்ல முடியாது. காலம் தான் பதில் சொல்ல வேண்டும்.

    தேனி மாவட்டம் போடியில் தாழ்த்தப்பட்டோர் மீதான தாக்குதல் துரதிருஷ்டவசமானது. திட்டமிட்டு இந்த தாக்குதல் நடத்தப்பட்டு இருக்கிறது.

    இந்த தாக்குதலில் ஈடுபட்ட அத்தனை பேர் மீதும் போலீசார் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அவரிடம் பெட்ரோல், டீசல் விலை தினமும் உயர்ந்து வருகிறதே? என நிருபர்கள் கேட்ட போது, ஜி.எஸ்.டிக்குள் கொண்டு வந்தால் மட்டுமே பெட்ரோல், டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்த முடியும். இதற்கு மாநிலங்கள் ஒத்துழைக்க வேண்டும் என்றார். #cauveryissue

    ×